பரவிய செய்தி
மதிப்பீடு
சுருக்கம்
விளக்கம்
Call forwarding என்பது ஒருவரிடம் இருந்து உங்களுக்கு வரும் அழைப்புகளை வேறொரு மொபைல் எண்ணிற்கு forward செய்வது. இதில், உங்களுக்கு வரும் அனைத்து அழைப்புகளையும் forward செய்யலாம், நீங்கள் வேலையாக இருக்கும் நேரத்தில் வரும் அழைப்புகளை forward செய்யலாம், பதில் அளிக்க விரும்பாத அழைப்புகளை forward செய்யலாம் அல்லது not reachable ஆக இருக்கும் நேரத்தில் கூட உங்கள் செல்போனிற்கு வரும் அழைப்புகளை forward செய்ய முடியும்.
” மெசேஜில் கூறியது போன்று *#62# என டயல் செய்யும் போது Call forwarding என்றும், அதனுடன் +9157010 என்ற என்னும்( ஒவ்வொருவருக்கும் எண் வேறுபடும்) வருகிறது. இதன்பிறகு மொபைலில் உள்ள call settings சென்று Call forwarding உள்ளே சென்று பார்க்கையில் Forward when unreachable தவிர மற்ற அனைத்திலும் Disable என்றே உள்ளது.
*#62# என டயல் செய்த போது வந்த +9157010 என்ற எண்ணே Forward when unreachable-லில் இடம்பெற்றுள்ளது. இதுmobile operator வழங்கும் Default எண். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு எண்கள் வழங்கப்பட்டு இருக்கும். அந்த எண்ணிற்கு போன் செய்து பார்த்தால் தொடர்பு எல்லைக்கு அப்பால் உள்ளார் என்று வரும். காரணம் உங்கள் செல்போன் not reachable ஆக இருக்கும் போது மட்டுமே அழைப்புகள் இந்த எண்ணிற்கு forward செய்யப்படும் “.
call forward மூலம் நமக்கு வரும் அழைப்புகளை forward செய்ய முடியுமே தவிர நமது தகவல்கள், நடவடிக்கைகளை கண்காணிக்க முடியும் என்பது தவறான தகவல்.
Forward when unreachable தவிர மற்ற option-களில் call forward செய்ய வேறொரு செல்போன் எண்கள் கொடுக்கபட்டால் அதனை disable செய்ய ##002# என்று டயல் செய்தால் போதும். Call forwarding Erase ஆகியதாக காண்பிக்கும்.
அதன்பின் settings சென்று பார்க்கையில் ஒரு சிலருக்கு Forward when unreachable இல் உள்ள எண் மாறாமல் இருக்கும். அதன் மூலமே உங்கள் செல்போன் not reachable அல்லது switched off என்ற voice செல்கிறது. அந்த எண்ணை மாற்ற வேண்டும் என்றால் உங்களின் mobile operator-யை தொடர்பு கொண்டு மாற்றிக் கொள்ளலாம்.
ஆக, Call forwarding மூலம் நமக்கு வரும் செல்போன் அழைப்புகளை forward மட்டுமே செய்ய முடியும், நம்முடைய செயல்களை கண்காணிக்க முடியாது என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது.