Keyboard Shortcuts
கணினி உபயோகப்படுத்துபவர்களுக்கு சில Keyboard Shortcut Keys வழிமுறைகள் தெரிந்திருப்பது அவசியமான ஓன்று. உங்களது வேலையினை எளிமையாக செய்து முடிப்பதற்கு அவை பெரிய உதவியாக இருக்கும். இந்த பகுதியில் சில முக்கிய Shortcut Key க்களின் பயன்பாடு பற்றி தெரிந்துகொள்வோம்.
கம்ப்யூட்டர் கீபோர்டு என்றால் என்ன? என்பது பற்றி ஓரளவிற்கு தெரிந்திருக்கும். கம்ப்யூட்டரை பயன்படுத்துவோர் தகவல்களை கொடுக்க பயன்படுத்திடும் இன்புட் கருவி கம்ப்யூட்டர் கீபோர்டு. அதேசமயம் கம்ப்யூட்டர் கீபோர்டு மூலமாக நாம் எளிமையாக சில செயல்களை கணினியில் செய்திட முடியும். அதனை தான் Shortcut என அழைப்பார்கள். கணினி உபயோகப்படுத்துபவர்களுக்கு சில Keyboard Shortcut Keys வழிமுறைகள் தெரிந்திருப்பது அவசியமான ஓன்று. உங்களது வேலையினை எளிமையாக செய்து முடிப்பதற்கு அவை பெரிய உதவியாக இருக்கும். இந்த பகுதியில் சில முக்கிய Shortcut Key க்களின் பயன்பாடு பற்றி தெரிந்துகொள்வோம்.
Important Keyboards
Alt + F
நீங்கள் தற்போது பயன்படுத்திக்கொண்டு இருக்கின்ற அப்ளிகேஷனின் “File” ஆப்ஷனை திறக்கலாம். உதாரணத்திற்கு நீங்கள் paint (பெயிண்ட்) அப்ளிகேஷனை பயன்படுத்தி வரைந்துகொண்டு இருக்கிறீர்கள் என்றால் அதனை சேமித்துவைத்துக்கொள்ள (Save) File ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும் அல்லவா. அதற்க்கு பதிலாக Alt + F ஐ அழுத்தினால் அந்த ஆப்சன் திறக்கும்.
Alt + E
நீங்கள் தற்போது பயன்படுத்திக்கொண்டு இருக்கின்ற அப்ளிகேஷனின் “Edit” ஆப்ஷனை திறக்கலாம்.
Alt+Tab
ஒரு அப்ளிகேஷனில் இருந்து இன்னொரு அப்ளிகேஷனுக்கு மாறுவதற்கு Alt+Tab ஐ அழுத்திடலாம். உதாரணத்திற்கு நீங்கள் Paint, Excel இரண்டையும் ஒரே நேரத்தில் பயன்படுத்துகிறீர்கள் என வைத்துக்கொள்வோம். Excel பயன்படுத்திக்கொண்டிருக்கும் உங்களுக்கு paint ஐ திறக்க வேண்டும் என்றால் Mouse ஐ பயன்படுத்தி திறக்க வேண்டும் அல்லது Alt+Tab ஐ அழுத்தி திறக்கலாம்.
F1
“Help” ஆப்சனை திறக்க F1 ஐ அழுத்திடலாம். நீங்கள் எந்த அப்ளிகேசனையும் பயன்படுத்தாத போதோ அல்லது விண்டோஸ் திரையில் இருந்துகொண்டோ F1 ஐ அழுத்தினால் விண்டோஸ் ஹெல்ப் திறக்கும். அப்ளிகேசனில் இருந்துகொண்டு F1 ஐ அழுத்தினால் அந்த அப்ளிகேஷனின் ஹெல்ப் திறக்கும்.
F2
செலக்ட் செய்திருக்கும் File இன் பெயரை மாற்றுவதற்கு [Rename]
Computer Basics in Tamil
Ctrl+N
நீங்கள் தற்போது பயன்படுத்துகின்ற அப்ளிகேஷனின் புதிய விண்டோவை (New Window) திறக்க Ctrl+N ஐ அழுத்திடுங்கள்
Ctrl+A
அனைத்தையும் செலக்ட் செய்திட
Ctrl+B
நீங்கள் செலெக்ட் செய்துள்ள “Text” ஐ போல்ட் (Bold) ஆக்குவதற்கு
Ctrl+I
நீங்கள் செலெக்ட் செய்துள்ள “Text” ஐ இத்தாலிக் (Italics) முறையில் format செய்வதற்கு
Ctrl+U
நீங்கள் செலெக்ட் செய்துள்ள “Text” ஐ அடிக்கோடிட (Underline)
Ctrl+F
Find ஆப்சன் திறக்கும். அதன் மூலமாக ஒரு வார்த்தை அல்லது எழுத்து அந்த பகுதியில் இருக்கிறதா என்பதனை தெரிந்துகொள்ள முடியும்
Ctrl+S
நீங்கள் தற்போது பயன்படுத்துகிற File ஐ Save செய்வதற்கு
Ctrl+X
ஒரு File ஐ ஓரிடத்தில் இருந்து cut செய்வது [நீங்கள் இன்னொரு இடத்தில் paste செய்தவுடன் பழைய இடத்தில் file நீக்கப்பட்டு விடும்]
Shift+Del
ஒரு File ஐ ஓரிடத்தில் இருந்து cut செய்வது [நீங்கள் இன்னொரு இடத்தில் paste செய்தவுடன் பழைய இடத்தில் file நீக்கப்பட்டு விடும்]
Ctrl+C
ஒரு File ஐ ஓரிடத்தில் இருந்து Copy செய்வது [நீங்கள் இன்னொரு இடத்தில் paste செய்தாலும் பழைய இடத்தில் file அப்படியே இருக்கும்]
Ctrl+Ins
ஒரு File ஐ ஓரிடத்தில் இருந்து Copy செய்வது [நீங்கள் இன்னொரு இடத்தில் paste செய்தாலும் பழைய இடத்தில் file அப்படியே இருக்கும்]
Ctrl+V
Copy அல்லது cut செய்த file ஐ Paste செய்வதற்கு
Shift+Ins
Copy அல்லது cut செய்த file ஐ Paste செய்வதற்கு
Ctrl+Y
Redo [பிந்தைய Action க்கு செல்வது]
Ctrl+Z
Undo [முந்தைய Action க்கு செல்வது]
Ctrl+K
செலக்ட் செய்திருக்கும் Text இல் Hyperlink ஐ பின்னூட்டம் செய்திட
Ctrl+P
நீங்கள் தற்போது இருக்கின்ற பக்கத்தை பிரதி (Print) எடுக்க
Alt+F4
தற்போதைய அப்ளிகேசனை மூடிட (close)
Windows Key + E
File Manager ஐ ஓபன் செய்திட
Windows Key + L
உங்களது கணினியை Logoff செய்திட
அடுத்த பதிவில் இன்னும் அதிகமான Keyboard Shortcut Key பற்றி அறிந்துகொள்வோம்
Previous
Learn Excel in Tamil
Next
எக்ஸலில் இருக்கக்கூடிய முக்கிய ஆப்சன்கள்
First name or full name Email
Sridaran Baskaran
Blogger